மேஷம்: தைரியமாக செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி செலவு அதிகரிக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகளை தேடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அலுவலக வேலை காரணமாக மன அழுத்தம் ஏற்படும். தடைப்பட்ட வேலைகள் சரளமாக நடைபெறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 9, 6.

ரிஷபம்: கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். கணினித் துறையினர் கண் எரிச்சல் காரணமாக பாதிக்கப்படுவீர்கள். பிள்ளைகள் விவகாரத்தில் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6, 1.
மிதுனம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபார சிக்கல்களை தீர்க்க பாடுபடுவீர்கள். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிரத்தையுடன் செயல்பட வேண்டி இருக்கும். காதலியின் மனம் புரியாமல் குழம்புவீர்கள். எதிரிகளை திறமையாக சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5, 3.
கடகம்: குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலைப்பளுவால் உடல் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் விட்டுக்கொடுத்துப் போய் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்காதீர்கள். வீண் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்: 2, 8.
சிம்மம்: வேலையை முதலில் செய்வதற்கு குழப்பம் ஏற்படும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1, 7.
கன்னி: குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். புதிய வியாபாரங்களில் தடம் பதிப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். போக்குவரத்திற்காக புதிய வாகனம் வாங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5, 9.
துலாம்: உறவினர்களின் சச்சரவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வெளியூர் பயணங்களில் பலன் குறைவாக இருக்கும். பிள்ளைகளின் பிரச்சனைகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை. அதிர்ஷ்ட எண்: 6, 4.
விருச்சிகம்: தடைபட்ட வேலைகள் சாதகமாக முடியும். புதிய தொழில்துறைகளில் ஈடுபட வேண்டாம். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்திலிருந்து தற்காலிகமாக பிரிவீர்கள். தாயாரின் உடல்நிலைக்காக கவலைப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம். அதிர்ஷ்ட எண்: 9, 5.
தனுசு: வெற்றிமேல் வெற்றியை குவித்து சந்தோஷம் அடைவீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் பணம் பெறுவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 3, 7.
மகரம்: அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீர்கள். நண்பரின் உதவியால் மனை இடம் வாங்குவீர்கள். குடும்ப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி தரும். பகை நீங்கி உறவுகள் பலப்படும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8, 2.
கும்பம்: செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். பயணங்கள் மூலம் பணம் திரட்டுவீர்கள். பிள்ளைகளை அவர்கள் விருப்பமான கல்லூரியில் சேர்க்க திட்டமிடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 8, 4.
மீனம்: இனி தெரியாத கவலையால் தூக்கம் தொலைப்பீர்கள். தந்தையாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள். வேலைப்பளுவால் மனஅழுத்தம் ஏற்படும். அறிவுத் திறமையால் அனைத்தையும் கடந்து வருவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3, 8.