மேஷம்: செல்வாக்கை காக்க சிறிது சிரமப்படுவீர்கள். மனைவியுடன் மல்லுக்கட்டாமல், உங்கள் மரியாதையை பேணுங்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக கடன் வாங்குவது தவிர்க்க முடியாது. காதல் வலை வீசும் பெண்களிடம் ஏமாந்து விடாதீர்கள். சிலருக்கு கிட்னி பிரச்சனைகள் ஏற்பட்டு, வலியால் சிரமப்படுவீர்கள். சிறிய விபத்துகளில் சிக்கி கவனமாக இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 9, 7, 6, 1.

ரிஷபம்: வியாபாரத்தில் திடீர் சறுக்கலை சந்திப்பீர்கள். கூட இருந்தவரே உங்களை ஏமாற்றி விட்டு செல்லக்கூடிய நிலைக்கு ஆளாவீர்கள். இனிக்க இனிக்க பேசும் பெண்களிடம் கவனமாக இருங்கள். உறவினர்களிடையே அந்தஸ்துக்கான பிரச்சனை உருவாகி, அது அவமானத்தை ஏற்படுத்தலாம். தேவைக்காக எடுத்த கடனில் சிக்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6, 1, 2, 9.
மிதுனம்: அரசாங்க அதிகாரிகளுக்கு புது வாய்ப்புகள் வந்துவிடும், மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் மற்றும் புகழும் செல்வாக்கும் உங்களுக்காக வரலாம். உங்கள் உடல் நலத்திற்கு கவனம் செலுத்தி, அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். புதிய வீடு வாங்கும் வாய்ப்பு உருவாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5, 9, 4, 3.
கடகம்: அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்வதால் உறவினர்களிடையே மரியாதை கொண்டு வருவீர்கள். கடுமையான உழைப்பால் பொருளாதார நிலை முன்னேறும். அரசாங்க வேலைக்கான வாய்ப்பு, உங்கள் திறமைக்கு முன்னிலை பெறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 2, 3, 8, 5.
சிம்மம்: எதிரிகள் திடீர் திட்டங்களை துவங்கி உங்களை வீழ்த்த நினைத்தாலும், நீங்கள் அதை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1, 7, 6.
கன்னி: தொழில்துறைகளில் புதிய முயற்சியில் ஈடுபடுவது நஷ்டம் தரும். அரசியல்வாதிகள் சட்ட சிக்கல்களில் மாட்டி அவதிப்படுவீர்கள். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் எதிர்பார்க்கின்றன. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5, 1, 2, 9.
துலாம்: திடீர் பண வரவு உங்கள் வாழ்க்கையை மாறிவிடும். மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மக்கள் மத்தியில் மரியாதையை அதிகரிப்பீர்கள். வியாபாரிகளுக்கு பொருளாதார வளர்ச்சி, விற்பனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை. அதிர்ஷ்ட எண்: 6, 9, 4, 3.
விருச்சிகம்: வெற்றியடைந்து, அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கின்றீர்கள். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். தொழிலில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டாகும். கடன்களை அடைப்பீர்கள். உங்களின் வளவள பேச்சால் காதல் முறிந்து காதலித்தவள் பிரிந்து போகும் நிலையை ஏற்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்: 9, 3, 8, 5.
தனுசு: மனக்கவலை அதிகரித்து, தூக்கம் பாதிக்கப்படும். எதிர்பாராத விஷயங்கள் நடந்தாலும், வாழ்க்கையில் புதுமைகள் வரும். காதல் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள். திடீரென்று நோய்வாய்ப்பட்டு பிள்ளைகளை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். வெளியில் போகும்போது வீட்டை பூட்டி செல்ல மறக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிஷ்ட எண்: 3, 7, 6, 1.
மகரம்: வசந்தம் வீசும் காலம், அனைத்து துறைகளிலும் செல்வாக்கு பெருகும். உங்களின் திறமையை வெளிப்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். பெண்களின் மயக்கும் வார்த்தைகளில் மனம் சொக்கி போவீர்கள். உடலில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8, 1, 2, 9.
கும்பம்: பொதுமக்கள் மத்தியில் உங்கள் பெயர் புகழ் அடையும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். வீடு வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். நீண்ட காலமாக நினைத்த பெண்ணின் மனதில் நிரந்தரமாக இடம் பிடிப்பீர்கள். சொத்தில் பங்கு வேண்டும் என்று சொந்த சகோதரர் போட்ட சண்டைக்கு முடிவு காண்பீர்கள். தங்க நகைகளை வாங்கி மனைவியை மகிழ்விப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 8, 9, 4, 3.
மீனம்: தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியுடன் முடிந்து, மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். உங்கள் அந்தஸ்து அதிகரித்து, மற்றவர்கள் உங்களை போற்றுவார்கள். அவசியமான நேரத்தில் நெருங்கிய பெண் நண்பரிடம் பண உதவி பெறுவீர்கள். சகோதரியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3, 8, 5.