By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேபாள பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 356 ஆக உயர்வு
    1 Min Read
    மாமரத்தைப் பற்றிக்கொண்டு உயிர் தப்பிய கூலித்தொழிலாளி
    1 Min Read
    சீனாவில் அசத்திய இரட்டை சகோதரிகள்: அரங்கேற்றம் செய்த பரதநாட்டியத்திற்கு குவிந்த பாராட்டு
    1 Min Read
    தனது மகனை ஈரான் படுகொலை செய்ய முயன்றது: நெதன்யாகு குற்றச்சாட்டு
    1 Min Read
    ராணுவ பதவியில் கின்னஸ் சாதனை படைத்த பென்குயின் ‘சர் நில்ஸ் ஒலாவ்’ விரைவில் தந்தை!
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    பரோலில் வந்து 40 ஆண்டுகள் தலைமறைவு: ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் கைதி கைது
    1 Min Read
    இ.வி.எம். குறித்து தவறான தகவல்களை நம்ப வேண்டாம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
    1 Min Read
    23 காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணை: புலனாய்வு அமைப்பு நடவடிக்கை
    1 Min Read
    டெல்லியில் கனமழை: 397 விமானங்கள் தாமதம்; 26 விமானங்கள் ரத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பித்தத்தால் அவதியா… ஆறு புதினா இலைகள் போதும்!!!
    1 Min Read
    கண்களை பாதுகாக்க சில டிப்ஸ் உங்களுக்காக!!!
    2 Min Read
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்புப் பணிக்கு சிறப்பு குழு – டெல்லியில் அமைச்சர்கள் முகாம்
    1 Min Read
    “ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்தாரா?” – 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு; பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்
    1 Min Read
    அனைத்து விதமான நோயையும் தடுக்கும் வைட்டமின் சி சத்து அடங்கிய கிவி பழம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “இது மோசடி அல்ல; ஒப்பந்தப் பிரச்சினைதான்!” – சன்னி லியோனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > “இது மோசடி அல்ல; ஒப்பந்தப் பிரச்சினைதான்!” – சன்னி லியோனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சினிமா

“இது மோசடி அல்ல; ஒப்பந்தப் பிரச்சினைதான்!” – சன்னி லியோனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Nagaraj
Last updated: August 27, 2026 6:20 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் ஸ்ரீநாராயணன் என்பவர் நடிகை சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் மேலாளர் சன்னி ரஜானி ஆகியோருக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டு அந்தேரி நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

தெலுங்கு திரைப்படம் ஒன்றில் சன்னி லியோனுக்கு வாய்ப்பு பெற்றுத்தந்ததற்காக, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.1.75 கோடி மற்றும் 10 சதவீத கமிஷன் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு பகுதி தொகையை மட்டும் வழங்கிவிட்டு மீதித் தொகையை தரவில்லை என்றும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

மேலும், மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அந்தேரி நீதிமன்றம், குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து ஓம்பிரகாஷ் மும்பை திண்டோஷி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.ஏ. சானே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மோசடி மற்றும் நம்பிக்கை மீறலை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் இருந்தபோதிலும் முந்தைய நீதிமன்றம் அவற்றை உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என வாதிடப்பட்டது.

மறுபுறம், சன்னி லியோன் தரப்பில், புகாரில் குறிப்பிடப்பட்ட குற்றங்களுக்கு தேவையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரம் மோசடி குற்றமாக கருதுவதற்கான ஆதாரங்கள் இல்லாத ஒரு ஒப்பந்தத் தகராறு மட்டுமே எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்தேரி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனால் சன்னி லியோன் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.

 

You Might Also Like

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி! – ஜீவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு

“என்னை பார்த்து யாரும் பின்பற்றாதீங்க!” – கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா எச்சரிக்கை

ரக்‌ஷா பந்தன் விளம்பரத்துக்கு எதிர்ப்பு… வாபஸ் பெற்ற நகைக்கடை! – கிருத்தி சனோன் விவகாரம் பரபரப்பு

இந்தியாவிலேயே முதல் மாநிலமா கேரளம்? – திரைத்துறைக்கு ‘தொழில்’ அந்தஸ்து வழங்க அதிரடி முடிவு

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தில் அடுத்த அதிரடி! – ‘லுசர்’ பாடல் வெளியானது

TAGGED:#CourtVerdictContractDisputeDanielWeberLegalCaseMumbaiCourtSunnyLeoneஒப்பந்ததகராறுசட்டவிவகாரம்சன்னிலியோன்டேனியல்வெபர்நீதிமன்றத்தீர்ப்புமும்பைநீதிமன்றம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
அரசியல் செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக புகார்: முதல்வர் தரப்பில் விளக்கம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?