நீண்ட நாட்களாக ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன.
கமல்ஹாசன்–ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் ‘இந்தியன்’, ‘இந்தியன் 2’ படங்களுடன் தொடர்புடைய கதைக்களத்தை கொண்டதாக உருவாகிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் சேனாபதி கதாபாத்திரத்தில் கமல்ஹாசனை மீண்டும் திரையில் காண ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
