சென்னை : நடிகர் சூர்யா நடித்து வரும் ரெட்ரோ படத்தின் கண்ணாடி பூவே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
கார்த்திக் சுப்புராஜ், சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரெட்ரோ’. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனிடையே, சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘கண்ணாடி பூவே’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், சிறையில் இருக்கும் சூர்யா, காதலியை நினைத்து உருகுவது போல காட்சிகளும், பாடல் வரிகளும் அமைந்துள்ளன.
கங்குவா படம் எதிர்பார்த்து வெற்றியை அடையாததால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தை வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு கண்ணாடி பூவே லிரிக்கல் வீடியோ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.