ஐதராபாத்: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கயாடு லோஹர், தனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் தனுஷ் என தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது, “தமிழ் சினிமாவில் உங்களின் ஃபேவரிட் ஹீரோ யார்?” என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கயாடு லோஹர், “தனுஷ், தனுஷ், தனுஷ் மட்டும்தான்” என உற்சாகமாக பதிலளித்தார்.
கயாடு லோஹர் இதுவரை தனுஷுடன் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும், சமீபத்தில் தனுஷின் ‘காரா’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததாகவும், கால்ஷீட் பிரச்சினையால் அந்த வாய்ப்பை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
‘டிராகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கயாடு, அதன்பின் ‘இதயம் முரளி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சாய் அபயங்கருடன் இணைந்து அவர் நடித்த ‘பவழ மல்லி’ பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
