ஐதராபாத்: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவுக்கு நடனத்துக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ள அவர், தற்போது தனுஷுக்கு ஜோடியாக ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் புதிய கடைகள் திறப்பு விழாக்களில் பங்கேற்று வரும் ஸ்ரீலீலா, ரசிகர்களையும் நேரில் சந்தித்து வருகிறார்.
ரசிகர்களை நேரில் சந்திக்கும்போது அவர்கள் காட்டும் அன்பும் உற்சாகமான வரவேற்பும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். பணம் மற்றும் புகழால் கிடைக்காத மகிழ்ச்சியை ரசிகர்களின் அன்பு தருவதாகவும், இத்தகைய அன்பைப் பெறுவதில் நடிகையாக தான் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
