நியூயார்க்: ஆக்சன் ஜாம்பவான் சக் நோரிஸ் காலமானார். ‘தி வே ஆப் டிராகன்’ படத்தில் புரூஸ் லீயுடன் சக் நோரிஸ் சண்டை போட்ட ஆக்சன் காட்சியை பலர் மறந்திருக்க மாட்டார்கள்.
ஹாலிவுட்டின் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த நடிகர் சக் நோரிஸ் (86). அசாதாரண ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ஒரு தலைமுறையை திரையில் கட்டிப்போட்டவர் இவர்.
காலம் கடந்து இன்றளவும் சக் நோரிஸ் மீம்ஸ் என்று அவரின் அசாத்திய ஸ்டண்ட்களை பலர் உயிர்ப்புடன் வைத்துள்ளனர். அவருடைய ‘மிஸ்ஸிங் இன் ஆக்ஷன்’, ‘தி டெல்டா ஃபோர்ஸ்’ போன்ற படங்கள் உலகப் பிரசித்தம்.
அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியபோது கொரியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்ட அவர், ஆறு முறை உலக கராத்தே சாம்பியனாக விளங்கி சாதனை படைத்தார். ‘தி வே ஆப் டிராகன்’ படத்தில் புரூஸ் லீயுடன் சக் நோரிஸ் சண்டை போட்ட ஆக்சன் காட்சியை பலர் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்நிலையில் சக் நோரிஸ் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். கடந்த மார்ச் 19 அன்று குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அமைதியான முறையில் அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, “நான் வயதானவனாக மாறமாட்டேன்.. லெவல் அப் ஆகிறேன்” என்று தனது 86-வது பிறந்தநாளின் போது அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார்.