சென்னை: கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக உடல் எடையை மேலும் குறைத்து செம ஸ்லிம்மாக மாறி வருகிறார் நடிகர் அஜித்.
நடிகர் அஜித் குமார், தனது கார் கனவை நிறைவேற்றி வருகிறார். இதற்காக, உடல் எடையை கணிசமாகக் குறைத்தவர், இன்னும் மும்முரமாக பயிற்சியில் இருக்கிறார்.
தற்போது பயங்கர லீனாக அஜித் மாறியுள்ள போட்டோஸை பார்த்த ரசிகர்கள், ‘தல டக்கர் டோய்..’ என கமெண்ட் செய்து வருகிறார்கள். அவர் தற்போது போர்ச்சுகலில் நடைபெறும் கார் பந்தயத்திற்கு தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்.