சென்னை: வரும் ஜூலை 26ம் தேதி சென்னையில் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது ஆனால் ரசிகர்களின் பெருமளவு விருப்பத்தால் மேலும் அதிக அளவு இடம் இல்லாததால் இசை நிகழ்ச்சியை தற்பொழுது ஒத்தி வைத்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டது.
ஏற்கனவே, சிக்கிடு, மோனிக்கா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, கூலி படத்தின் 3வது பாடலான பவர் ஹவுஸ் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, “பவர் ஹவுஸ்” பாடல் வரும் 22ம் தேதி இரவு 9.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கும் அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் வெளியிடப்படுவதாக வீடியோ வெளியிட்டது.
அதேபோல் வரும் ஜூலை 26 ஆம் தேதி சென்னையில் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது ஆனால் ரசிகர்களின் பெருமளவு விருப்பத்தால் மேலும் அதிக அளவு இடம் இல்லாததால் இசை நிகழ்ச்சியை தற்பொழுது ஒத்தி வைத்துள்ளனர். விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.