ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார்.
நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த பின் நடிகை சோபிதாவை காதலித்து கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் இவர்கள் ஒன்றாக வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் உலா வந்தது.
இந்நிலையில், தற்போது சோபிதா துலிபாலா அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் நாக சைதன்யா டிஜே பிளே பண்ணுவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் நாக சைதன்யா ஸ்வெட்டர் ஒன்றை அணிந்து கொண்டு கழுத்தில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டும் டிஜேவாக மாறி சூழலுக்கு ஏற்ப பாடல் பிளே செய்கிறார். தற்போது, இந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.