சென்னை : மார்கன் படத்தின் முதல் ஆறு நிமிட காட்சியை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘மார்கன்’. இப்படம் விஜய் ஆண்டனியின் 12-வது திரைப்படமாகும். விஜய் ஆண்டனியின் தயாரிப்பு மற்றும் இசையமைப்பில் உருவான இப்படத்தை லியொ ஜான் பால் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும், பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ‘மார்கன்’ படத்தின் புரோமோஷன் நேற்றுமுன்தினம் மதுரையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் ஆறு நிமிட காட்சியை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். வித்தியாசமான க்ரைம் திரில்லர் படமாக இப்படம் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.