விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள அவர் படப்பிடிப்பு முடிந்து ஓய்வு நேரத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்ததாக தெரிவித்தார்.