பஞ்சாப்: அமிர்தசரஸ் பொற்கோயிலில் ஆண்ட்ரியா வழிபாடு நடத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோயிலுக்கு சென்று நடிகை ஆண்ட்ரியா வழிபட்டார்.
பொற்கோயிலுக்கு முன்பாக நின்றபடி எடுத்த ஃபோட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் அவர், சீக்கியர்கள் மீதான மதிப்பும், மரியாதையும் தற்போது அதிகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பொற்கோயிலுக்கு சென்றது, உணவுகளை ருசித்தது புதுமையான அனுபவத்தை கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவை இணையத்தில் மிகவும் அதிக அளவில் வைரலாகி வருகிறது.