சென்னை: நடிகை கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மேஜிக் வீடியோ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
டைரக்டர் பிரியதர்ஷன்-நடிகை லிசியின் மகள் கல்யாணி. மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து பிரபலமானவர். சிம்புவின் மாநாடு படத்திலும் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மேஜிக் வீடியோ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்து வியந்த கீர்த்தி சுரேஷ், எனக்கும் கற்றுக்கொடு என்று கமெண்ட் செய்துள்ளார்.
அவரின் கமெண்டுக்கு பதிலளித்த கல்யாணி, ‘முன்பு என் வீட்டிற்கு நீ வந்திருந்தபோது இதைபோல மேஜிக் செய்ததை மறந்துவிட்டாயா’ என்று கூறி இருக்கிறார்.