திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை கீர்த்தி சுரேஷ் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியில் வந்தபோது ரசிகர்கள் அவருடன் உற்சாகமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை கீர்த்தி சுரேஷ் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோயிலுக்கு வெளியே அவருக்கு ரசிகர்கள் பெருமாள் படத்தை பரிசாக வழங்கினர். பின்னர் பேட்டியளித்த அவர், இந்தி திரைப்படம் ஒன்றில் தற்போது நடித்து வருவதாக தெரிவித்தார்.
அடுத்த மாதம் கோவாவில் தனக்கு திருமணம் நடைபெற உள்ளதால் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்தார்.