சென்னை: தனியார் ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் இருவரும் தங்களது நீண்ட நாள் நட்பு குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது:-
எனக்கும் கனிமொழிக்கும் உள்ள உறவு மிகவும் அழகானது. 20 வருட நட்பு அது. அது எங்கிருந்து தொடங்கியது, எப்படி ஒன்று சேர்ந்தோம் என எந்த வகையிலும் விவரிக்க முடியாத உறவு. எனக்கு வருத்தமாகவோ அல்லது யாரிடமாவது பேச வேண்டும் என்றோ தோன்றும் போதெல்லாம் உடனே போனை எடுத்து கனிமொழிக்கு அழைப்பேன்.
நாங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல் பேசுகிறோம். “யாருக்காவது கிளம்பினால் அக்காவுக்கு மட்டும் தான்.. யாருக்காகவும் எங்கும் போக மாட்டேன்.. ஆனால் கனிமொழி அக்காவுக்கு என்றால் எங்கேயும் போவேன்.. எங்கள் நட்பைப் பற்றி எங்கும் பேசியதில்லை.. தேவையும் இல்லை. அவருக்கு அரசியல் தவிர வேறு எதுவும் தெரியாது என்றார்.