திருத்தணி : திருத்தணியில் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கூடவே தான் எழுதிய அடுத்த படக் கதையையும் எடுத்துச் சென்றுள்ளார். இதனால் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிய வருகிறது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. இதையடுத்து அவர் சித்தார்த்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது அடுத்த படக் கதையை எழுதி முடித்துள்ளதாகத் தெரிகிறது. திருத்தணியில் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கூடவே தான் எழுதிய அடுத்த படக் கதையையும் எடுத்துச் சென்றுள்ளார். மேலும் அந்த ஸ்கிரிப்டை முருகன் காலடியில் வைத்து வழிபட்டார்.
இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.