மலையாளத் திரைப்படமான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்கின் ரீமேக்கான இந்தப் படம் இந்தியில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் ‘ஃபிர் ஹெரா பெரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. முதல் பாகத்தில் முக்கிய வேடங்களில் நடித்த அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
நீரஜ் வோரா இதை இயக்கினார். இந்தப் படமும் வெற்றி பெற்றது. இதன் மூன்றாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. பிரியதர்ஷன் இயக்கிய படத்தில் நடிக்க அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அக்ஷய் குமார் இதைத் தயாரிக்க இருந்தார். இந்த சூழ்நிலையில், பரேஷ் ராவல் திடீரென இந்தப் படத்திலிருந்து வெளியேறினார்.

இதன் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஒப்பந்தத்தை மீறியதற்காக ரூ.25 கோடி இழப்பீடு கோரி நடிகர் அக்ஷய் குமார் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பரேஷ் ராவலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தவர் பரேஷ் ராவல்.