மும்பை: நிதி நெருக்கடியால் அக்ஷய் குமாரின் புதிய படம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அக்சய் குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
‘வெல்கம் டு தி ஜங்கிள்’ பிரபலமான ‘வெல்கம்’ படத்தின் மூன்றாவது பாகமாகும். கடைசியாக ஆகஸ்ட் 2023-ல் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின்னர் கடந்த ஒன்பது முதல் பத்து மாதங்களாக பெரிய முன்னேற்றத்தைக் காணவில்லை.
பெரிய நட்சத்திரங்கள் உள்பட நடிகர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இதனால் நடிகர்கள் படத்திலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தில் சுனில் ஷெட்டி, அர்ஷத் வார்சி, பரேஷ் ராவல், ஜானி லீவர், ராஜ்பால் யாதவ், துஷார் கபூர், ஷ்ரேயாஸ் தல்படே, க்ருஷ்ணா அபிஷேக், கிகு ஷர்தா, தலேர் மெஹந்தி, மிகா சிங், ராகுல் தேவ், முகேஷ் திவாரி, ஷரிப் ஹாஷ்மி, இனாமுல்ஹக், ஜாகிர் ஹுசைன், யஷ்பால் சர்மா, ரவீனா டாண்டன், லாரா தத்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், திஷா பதானி மற்றும் வ்ரிஹி கோட்வாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.