மும்பை: ‘புலே’ படத்தை எதிர்ப்பவர்களை கடுமையாக நடிகரும் இயக்குனருமான அனுராக் சாடியுள்ளார்.
‘புலே’ பட ரிலீஸை எதிர்க்கும் பிராமண சங்கங்களை அனுராக் காஷ்யப் கடுமையாக சாடியுள்ளார். இந்த நாட்டில் சாதி இல்லையென்றால், ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே போன்றோர் ஏன் போராட போகிறார்கள்.
பிராமணர்கள் உண்மையிலேயே வெட்கப்படுகிறார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட படம் குறித்து சாதி சங்கத்திற்கு எப்படி தெரியவந்தது எனவும் வினவியுள்ளார்.
புலே படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்துக் வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.