சென்னை: வாழை சிம்பிளான படம்தான். ஆனால் உள்ளே அவ்ளோ வலி இருக்கு என்று நடிகர் சிம்பு பாராட்டி தள்ளியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதை ஒட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களின் பார்வையை வெளிப்படுத்தினர்.
அந்த வகையில், நடிகர் சிலம்பரசன் வாழை படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை நேரில் அழைத்துப் பேசியுள்ளார். மேலும் படம் குறித்த தனது பார்வையை வீடியோவிலும் பேசி பதிவு செய்துள்ளார். வாழை படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும். படம் சிம்பிளான ஒரு படம் தான் ஆனால் படத்திற்குள் அவ்வளவு வலி இருக்கிறது என்றும் சிம்பு தெரிவித்தார்.