திருவண்ணாமலை: நேற்று விக்னேஷ் சிவன் இன்று சினேகா என்று திருவண்ணாமலை கோயிலுக்கு சினிமா பிரபலங்கள் விசிட் அடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. இந்த படத்திற்கு பிறகு விஜய், கமல், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். புன்னகை அரசி, சிரிப்பழகி என்றும் ரசிகர்கள் சினேகாவை கொண்டாடினர், இவர் கடந்த 2012 ஆம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், இந்த நிலையில் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா பங்குனி மாத பிரதோஷத்தை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். நேற்று முன்தினம் விக்னேஷ் சிவன் சென்ற நிலையில் இப்போது நடிகை சினேகா சென்றுள்ளார். இதனால் என்னப்பா இது சீசனா? பிரபலங்கள் எல்லாரும் திருவண்ணாமலைக்கு போறாங்களே என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.