திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் இளையராஜா. அவருக்கு சுவாமி பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இளையராஜா. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு இளையராஜா வருகை தந்தார் இதையடுத்து சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், மூலவர், உண்ணாமலை அம்மன், நவகிரகம் உள்ளிட்ட சன்னதிகளை தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிற்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.