ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சனை தொடர்ந்து முக்கிய பேச்சை உருவாக்கி வருகிறது. கடந்த நாளில் அவர் அளித்த பேட்டி இதற்கு மேலும் அடி கொடுத்தது. “என்னுடைய விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள்,” எனத் தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.
மேலும், “கெனிஷா ஒரு சர்டிபிகேட் சைக்காலஜிஸ்ட், அவருடன் இணைந்து எதிர்காலத்தில் ஹீலிங் சென்டர் அமைக்க திட்டமிட்டு இருக்கிறேன்,” என்ற தகவலால் வியக்கத்தக்க சூழ்நிலை உருவாகியுள்ளது.
முதலில், கெனிஷாவின் பெயர் இந்த விவாகரத்து தொடர்பாக ஒரு சந்தேகமாகக் கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து வந்த தகவல்களால் இது மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கெனிஷா பிரான்சிஸ் கோவாவில் உள்ள பப்புகளில் பாடுபவர் மற்றும் ஒரு சைக்காலஜிஸ்ட் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஜெயம் ரவி கோவாவுக்கு நண்பர்களுடன் சென்ற போது கெனிஷாவை சந்தித்ததாகவும், அவரின் குரல் ஜெயம் ரவிக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இணையத்தில் பிரபலமான கருத்துக்களில், ஜெயம் ரவியின் விஷயத்திற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
ஒரு ரசிகர் கெனிஷாவின் பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார், “ஜெயம் ரவி உங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறாரா?” என்ற கேள்விக்கு, கெனிஷா “நீங்கள் உங்கள் அப்பா அம்மாவுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?” உங்கள் கெட்ட எண்ணங்களிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்கள் பாதுகாப்பான நபரா என்று பதிலளிக்கிறது. இதுவரை ஜெயம் ரவி பற்றி வாய் திறக்காத கனிஷா, இப்படி ஒரு பதிவை போட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகிறார்.