சென்னை: தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சங்க தலைவர் பி.பிரேம்நாத் தலைமையில் நடந்தது! இந்த பொதுக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் மற்றும் நடிகர்கள் ரோபோ சங்கர், பிரியங்கா ரோபோ சங்கர், முத்துகாளை, கிங்காங், சாரபாம்பு சுப்புராஜ், பாவ லட்சுமணன், ஜூலி பாஸ்கர், சுதுகவ்வும் சிவக்குமார், சாய்கோபி, சந்திரபாபு ஈஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேடை நடன கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். நடன கலைஞர் இறந்தால், தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும். மூத்த நடனக் கலைஞர்களுக்கு மாதம் 2000. நடன கலைஞர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத பஸ் பாஸ் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.