சென்னை: நடிகை வரலக்ஷ்மி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் படம் பற்றி வந்துள்ள வித்தியாசமான ப்ரோமா செம வைரல் ஆகி வருகிறது.
வரலக்ஷ்மி சரத்குமார் இதுவரை நடிகையாக மட்டுமே எல்லோரும் பார்த்துள்ளோம். தற்போது அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். பல இயக்குனர்கள் நடிப்பு பக்கம் வந்து கொண்டிருகும் நிலையில், வரலக்ஷ்மி நடிகையாக இருந்து இயக்குனராக வந்திருப்பதாக ரசிகர்கள் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.
சரஸ்வதி என்ற படத்தை தான் வரலக்ஷ்மி இயக்கி வருகிறாராம். நடிகையும், இயக்குனரும் சண்டை போடுவது போல ப்ரோமோ வீடியோவை வரலக்ஷ்மி வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.