சென்னை: கோழிப்பண்ணை படத்தை பார்த்து அதில் நடித்துள்ள நடிகர் ஏகனை இயக்குனர் பார்த்திபன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி
மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை சமீபத்தில் பார்த்த பார்த்திபன் பட இயக்குனரான சீனு ராமசாமி மற்றும் அப்படத்தில் நடித்த ஏகனை பாராட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது ” இவ்வளவு மனித நேயமிக்க படத்த நான் சமீபத்துல பாக்கல. ஏகனின் நடிப்பு மிக நன்றாக உள்ளது. ஆல் தி பெஸ்ட் ஏகன் . இதுக்கு மேல பேசுனனா எமோஷனல் ஆகிடுவேன்” என கூறிவிட்டு சென்றுள்ளார்.