சென்னை : இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் 3 நாளில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் 3 நாளில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. ஓபனிங் வார இறுதியில், தமிழகத்தில் மட்டும் ₹24.5 கோடி,, வெளிமாநிலங்களில் ₹10.62Cr, வெளிநாடுகளில் ₹14.7 கோடியை வசூலித்துள்ளது.
படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த வாரம் ₹100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.