சென்னை: அமரன் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அமரன் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.