சென்னை : கோர்ட் அதிரடி உத்தரவு…கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ’தக் லைஃப்’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
’தக் லைஃப்’ திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தைச் சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிக்கள் ஆகியவற்றில் வெளியிடுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
இவ்வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் ’தக் லைஃப்’ படம் வெளியாகவுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தைத் தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.
திரைக் கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று வாதிட்டார். இதையடுத்து, ’தக் லைஃப்’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இணையதள சேவை, உத்தரவு, தடைவிதிப்பு, தக் லைஃப், திரைப்படம், கோர்ட், Internet service, order, prohibition, Tak Life, movie, court,