‘மதகஜராஜா’ திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன் மற்றும் பேச்சில் தடுமாற்றத்துடன் வீடியொன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால், ரசிகர்கள் அவருக்கு என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பி உள்ளனர். 2012ஆம் ஆண்டு, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘மதகஜராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவாக முடிவுற்றாலும், அதன் வெளியீடு அதேவேகத்தில் செய்யப்படவில்லை. இப்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு முன்னிட்டு 2025 ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் வரலாற்றில், விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி பணியாற்றியுள்ளார். தற்போது, படத்தின் புரோமோஷன் பணிகளில் விஷால், சுந்தர்.சி மற்றும் விஜய் ஆண்டனி ஈடுபட்டு உள்ளனர். இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மூவரும் கலந்துகொண்டு படம் குறித்து பேசினார்கள்.
அப்போது, மேடையில் பேசும் பொழுது விஷாலின் பேச்சில் தடுமாற்றம் மற்றும் கை நடுக்கம் பரவலாக கவனிக்கப்பட்டது. அவர் கூறியதும், “இந்த வருடம் சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், சிறந்த பாடகர் விருது கிடைக்கும்,” என்று பேசியிருந்தார். இது குறித்து தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, “நீங்கதான் முதன்முதலா பாட்டுப்பாடி வைரல் ஆனது… இன்னைக்குக்கூட வைரல் காய்ச்சலோடதான் வந்திருக்கீங்க” என்று கூறி, நடிகர் விஷால் காய்ச்சலுடன் நிகழ்ச்சிக்கு வந்ததை விளக்கினர்.
அவரின் இந்த தடுமாற்றமான பேச்சு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியுள்ளதால், ரசிகர்கள் விஷாலுக்கு என்ன விஷயம் என்ற கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என தங்களின் அக்கறையை தெரிவித்து வருகின்றனர்.