உலகெங்கிலும் உள்ள இசைக்கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ‘கிராமி விருதுகள்’ வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவில் பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற்றது. கிராமி விருது விழா அதன் புகழ் மற்றும் சர்ச்சைக்காக எப்போதும் அறியப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் உடைகள் பொதுவாக சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக இருக்கும்.
இந்நிலையில், இந்த ஆண்டு கிராமி விழாவில் கலந்து கொண்ட பிரபல ராப் பாடகர் கான்ய வெஸ்டின் மனைவி பியான்கா சென்சோரி, ‘நியூட் ட்ரெஸ்’ எனப்படும் வெளிப்படுத்தும் உடையை அணிந்திருந்தார். பியான்காவின் ஆடை தேர்வு சர்ச்சைக்குரியது மற்றும் பலரை முகம் சுளிக்க வைத்தது.

இதன் காரணமாக அவரும் அவரது கணவரும் விழாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. எது எப்படியிருந்தாலும், அவ்வப்போது கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்த ஜோடி, அதே நோக்கத்தில் இதைச் செய்திருக்கலாம் என்றும், பொது இடங்களில் இசையமைப்பாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.