ஐதராபாத்: தெலுங்கில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா தற்போது தண்டேல் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தை சந்து மொண்டெட்டி இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து ட்விட்டர் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தெலுங்கில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர். முதலில் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பின்னர் பிரிந்தனர். சமந்தாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு, சோபிதா துலிபாலாவைக் காதலித்தார் சைதன்யா.
இவர்களது காதலுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்ததால், இருவரும் கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். டோலிவுட்டில் தனது கேரியரை முறையாகவும், பெரிய ஹிட், ஃப்ளாப் கொடுக்காமல் நிதானமாகவும் நடத்தி வருபவர் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது. தண்டேலுக்கு முன் அவர் நடித்த கஸ்டடி படத்தை மிகவும் எதிர்பார்த்து இருந்தார். ஏனென்றால் அதை இயக்கியவர் வெங்கட் பிரபு. தமிழில் நல்ல ஹிட் கொடுத்த இயக்குனர் என்பதால் தெலுங்கிலும் ஹிட் கொடுப்பார் என நம்பினார் சைதன்யா. ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது.

பார்வையாளர்கள் படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை. திரைக்கதை, கதை ஒன்றும் புதிதல்ல என்று கூறி படத்தை மறுத்துவிட்டனர். அந்த படத்திற்கு பிறகு தூதா என்ற வெப் சீரிஸில் நடித்தார். வெப் சீரிஸ் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், சைதன்யாவுக்கு பேசுவதற்கு ஒரு வெற்றியைக் கொடுத்தது. இதனால் அவரும் மகிழ்ச்சி அடைந்தார். தூதாவுக்குப் பிறகு தண்டேல் படத்தில் நடித்தார். இது சித்து மொண்டெட்டியால் இயக்கப்பட்டது; தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்தார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு வெளியான தனது முதல் படமாக தண்டேலை மிகவும் செண்டிமெண்ட் படமாக பார்த்தார்.
இப்படம் பெரும்பாலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர், சாய் பல்லவியை தனது எக்ஸ் பக்கத்தில், “சாய் பல்லவி ராக் தி ஷோ.. முதல் பாதி சூப்பர்” என்று பாராட்டியுள்ளார். அதேபோல் மற்றொரு ரசிகர், “நாக சைதன்யாவின் நடிப்பு அருமை. இது நாக சைதன்யாவுக்கு பிளாக்பஸ்டர். படத்தில் காதல் கதை நன்றாக உள்ளது. பாடல்கள், சண்டைக் காட்சிகள், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை த்ரில்லாக உள்ளது” என்று பாராட்டியுள்ளார். அவரைத் தொடர்ந்து பிளாக்பஸ்டர் கொடுத்த நாக சைதன்யாவுக்கும் தண்டேல் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் இந்த ரசிகர்.
மேலும் சாய் பல்லவி மிக அருமையாக நடித்துள்ளார். முதல் பாதி சூப்பர். காதல் காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமானவை. சினிமாவில் இது ஒரு சிறந்த அனுபவம் என்று கூறியுள்ளார். இதனால், நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படக்குழுவினரும், விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.