சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ட்ரைலர் மே 1-ம் தேதி வெளியாகி ‘டார்க் காமெடி’ ஜானரில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர்.
இதில், அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் முழு டிரெய்லரும் படத்தின் ஆன்லைன் தன்மையை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறும் இலங்கைத் தமிழர்களின் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் மையம்.

சசிகுமார் – சிம்ரன் இலங்கை தமிழ் ஜோடியாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தை ‘காப்பாற்றும்’ பாத்திரத்தில் டிரைலர் முழுவதும் கவனம் ஈர்க்கிறார் யோகி பாபு. சசிகுமாரும் சிம்ரனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, இதில் உள்ள சிறுவன் மட்டும் தனியாக கவனத்தை ஈர்க்கிறான். மொத்தத்தில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஒரு முக்கியமான படைப்பாகவும், ‘டார்க் காமெடி’ ஜானரில் சுவாரசியமான படமாகவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலையைக் காட்டுவதாகவும் டிரெய்லர் தெரிவிக்கிறது.