சென்னை: இட்லிக்கடை படத்தின் என்சாமி தந்தானே பாடலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் அடுத்த பாடலான என்சாமி தந்தானே பாடலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.