ஐதராபாத்: நீங்கள் முட்டாளாக இருந்தால் முழு படத்தையும் பாருங்கள், நீங்கள் புத்திசாலியாக இருந்தால் தியேட்டரை விட்டு வெளியேறுங்கள் என்று போடப்பட்ட கார்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எதற்கு தெரியுங்களா?
ஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி. & வீனஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி.மனோகரன் மற்றும் கே.பி. ஸ்ரீகாந்த் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் Ui. இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கி நடித்துள்ளார்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள Ui படம் இன்று [டிசம்பர் 20] தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படம் ஆரம்பித்த உடனே தியேட்டர் திரைகளில் போடப்பட்ட கார்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது, புத்திசாலிகள் முட்டாள்களை போல் தெரிவார்கள், முட்டாள்கள் தங்களை புத்திசாலிகளை போல் காட்டிக்கொள்வார்கள், நீங்கள் முட்டாளாக இருந்தால் முழு படத்தையும் பாருங்கள், நீங்கள் புத்திசாலியாக இருந்தால் தியேட்டரை விட்டு வெளியேறுங்கள் என்ற வசனம் இடம் பெற்ற கார்டை படம் ஆரம்பிக்கும் போதே இடம்பெறச் செய்துள்ளனர்.
இதை புகைப்படம் எடுத்த ரசிகர்கள் இணையத்தில் அதை பகிர்ந்து கமெண்ட்களை குவித்து வருகின்றனர். சிலர் இதை வரவேற்றுள்ள நிலையில், சிலர் இதை கொஞ்சம் ஓவர் என்றும் புலம்பி வருகின்றனர்.