சென்னை : கூலி திரைப்படம் தமிழகத்தில் 6 நாட்களில் ரூ. 117 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடி வசூல் செய்து லியோ சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கூலி திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அப்படி இருந்தும் கூட வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
6 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கூலி படம் ஒவ்வொரு மாநிலங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கூலி திரைப்படம் தமிழகத்தில் 6 நாட்களில் ரூ. 117 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடி வசூல் செய்து லியோ சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.