ராமநாதபுரம்: நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த வழக்கில், வாங்கிய பணத்தை திரும்ப செலுத்துவதாக இருந்தால் முக்கிய குற்றவாளிகளான அழகப்பன், அவரது மனைவி ஆர்த்திக்கு முன் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
கடலாடி அருகே நிலம் வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 6 பேர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இதில் குற்றம்சாட்டப்பட்ட அழகப்பனின் உறவினர்கள் 4 பேருக்கு மட்டும் நீதிபதி முன் ஜாமீன் வழங்கினார்.