சென்னை: காதலிக்க நேரமில்லை படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து முதல் முறையாக நித்யா மேனன் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வினய், யோகி பாபு, டி.ஜே. பானு ஆகியோர் நடித்திருந்தனர்.அஜித்தின் புது கெட்டப்… உலா வரும் படத்திற்கு விளக்கம் கொடுத்த படக்குழு
சென்னை: நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அதில் இருந்து ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இது அஜித்தின் புது கெட்டப் என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் அது அவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் படம் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் விடாமுயற்சி ட்ரெய்லரில் இருந்து ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அது அஜித் புது லுக் என சிலர் தகவல் பரப்ப தொடங்கி இருக்கின்றனர்.
இருப்பினும் அது அஜித் இல்லை என படக்குழு விளக்கம் கொடுத்து இருக்கிறது.