சென்னை: பணி 2 படத்தின் டைட்டில் குறித்து ஜோஜு ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமாகிய திரைப்படம் பணி. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அபிநயா, சகர் சூர்யா மற்றும் ஜுனாய்ஸ் நடித்தனர். இப்படத்திற்கு விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி எஸ் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் பணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜோஜு ஜார்ஜ் பணி 2 மற்றும் பணி 3 திரைப்படங்களை இயக்கவுள்ளார். பணி 2 முந்தைய பாகத்திற்கு தொடர்பு இல்லாமல். புது கதாபாத்திரங்களுடன், புது இடத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தை குறித்து புதிய அப்டேட் ஒன்றை ஜோஜு ஜார்ஜ் கொடுத்துள்ளார். படத்திற்கு டீலக்ஸ் என தலைப்பு வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.