சென்னை: ரெட்ரோ படத்தின் கார்ட்டூன் சித்திர வடிவில் கனிமா பாடல் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ‘கனிமா..’ பாடல் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ரெட்ரோ படத்தில் இடம்பெறும் கனிமா பாடல், 15 நிமிட சிங்கிள்-ஷாட் ஆக படமாக்கப்பட்டுள்ளதை மிக சுவாரசியமாக பி.டி.எஸ் காமிக் வடிவத்தில் சித்திரமாக்கி ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது ரெட்ரோ படக்குழு.
நெடுநாள் இடைவெளிக்குப் பின் பூஜா ஹெக்டே தமிழில் கதாநாயகியாக நடித்துள்ளதால் ரெட்ரோ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும், முதன்முறையாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பதால் இத்திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர். இத்திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி வெளியாக உள்ளது.