சென்னை: இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். தெலுங்கு பேசும் மக்களைப் பற்றி அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், அகில இந்திய தெலுங்கு கூட்டமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவரை வரவழைக்க போலீசார் சென்றபோது, நடிகை கஸ்தூரி தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கஸ்தூரியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் தயாரிப்பாளர் உதவியுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக போலீசார் ஆந்திராவில் முகாமிட்டனர். கஸ்தூரிக்கு ஹைதராபாத்தில் வீடு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆந்திர அரசியலில் குதிக்கப் போவதாக அவரே கூறியிருந்தார். அங்கு சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கஸ்தூரி ஆந்திராவில் தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.