மதுரை: இருக்கிறவங்ககிட்ட வாங்கிக்கோங்க. ஏழைகளுக்கு வரியை பார்த்து போடுங்கள் என்று நடிகர் வடிவேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆணையர் சஞ்சய் ராய், முதன்மை ஆணையர் வசந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பொங்கல் பண்டிகையை மக்களோடு சேர்ந்து கொண்டாட ஆசைப்பட்டேன். அந்த ஆசை இங்கேயே நிறைவேறி விட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்கப் போவேன். முன்பெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் மாட்டை அவிழ்த்து விடுவார்கள். மாடு எங்க வருதுன்னு தெரியாது. பின்னால வந்து குத்திட்டு போயிரும். ஆனால் தற்போது கட்டுப்பாட்டோடு மாட்டை அவிழ்த்து விடுகிறார்கள்.
அடுத்தடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். சுந்தர் சி யின் கேங்கர்ஸ் படத்திலும், பகத் பாசிலோடு மாரிசன் படத்திலும் நடித்து வருகிறேன். பிரபு தேவாவும், நானும் விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளோம்.
வருமான வரித்துறை இருக்கிறவங்ககிட்ட வரியை அதிகமாக போட்டு வாங்கிகோங்க… ஏழைகளுக்கு வரியை பார்த்து போடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.