சென்னை: லப்பர் பந்து படத்தில் தினேஷின் மனைவியாக நடித்த ஸ்வஸ்விகா அடுத்ததாக சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. படக்குழு எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை கங்குவா திரைப்படம்.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார். நடிகர் சூர்யாவின் 45-வது படம் தொடர்பான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.
ஆர்.ஜே.வாக இருந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சூர்யா 45′ பட அறிவிப்பு தொடர்பான முதல் போஸ்டரும் வெளியாகியது.
இந்த நிலையில் சூர்யா 45-ன் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தில் தினேஷின் மனைவியாக ஸ்வஸ்விகா நடித்து மக்களின் ஆதரவை பெற்றார்.
இந்நிலையில் அடுத்ததாக சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் எம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.