சென்னை ; சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படம் உலகளவில் ரூ. 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரின் கூட்டணியில் உருவான ”மதராஸி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வித்யுத் ஜாம்வால் வில்லனாக நடித்திருக்கும் இந்த ஆக்சன் படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் என்.வி. பிரசாத், ஸ்ரீ லட்சுமி மூவீஸ் சார்பில் தயாரித்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸான இப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் 11 நாட்களில் தமிழகத்தில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம், உலகளவில் ரூ. 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் நாட்டில் மட்டும் படம் சுமார் ரூ.55 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்திருப்பதால் வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.