இந்தி திரைப்பட இயக்குனர் நிதேஷ் திவாரி ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தை இயக்குகிறார். இந்த 2 பாகப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார்.

காஜல் அகர்வால் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் யாஷ் இணைந்துள்ளார். அவர் தொடர்பான காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில், ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் கை நோரிஸ் இதில் இணைந்துள்ளார்.
ஃப்யூரி ரோடு, தி சூசைட் ஸ்குவாட், கோஸ்ட் இன் த ஷெல், தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார். யாஷ் தொடர்பான சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பகுதி 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பகுதி 2027 தீபாவளிக்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.