சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக உள்ள மாதம்பட்டி ரங்கராஜ், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல சமையல்காரராக இருந்து, பின்னர் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், தமிழ்நாட்டின் பல பிரபலங்களின் வீட்டுவிழாக்களில் சமையல் செய்ததன் மூலம் பெரும் செல்வாக்கைப் பெற்றார்.
முதலில் ஸ்ருதியைத் திருமணம் செய்த ரங்கராஜ், பின்னர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்த புகைப்படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்தார். மேலும், சமூக வலைதளங்களில் ரங்கராஜை குறிவைத்து பதிவுகளும், வீடியோக்களும் வெளியிட்டார்.

நீண்டநாள் அமைதியாக இருந்த ரங்கராஜ், சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா மீது அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்தார். அவர் வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் என கோரியுள்ளார். இதனால் இருவருக்குமிடையிலான பிரச்சாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஜாய் கிரிஸில்டா, “எனது புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லை. ரங்கராஜ் தனது செல்வாக்கை தவறாக பயன்படுத்துகிறார். ஒரு பெண் இப்படிப்பட்ட நிலைமையில் சிக்கினால் உங்கள் வீட்டிலிருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். ரசிகர்கள், “மாதம்பட்டி ரங்கராஜ் உண்மையிலேயே செல்வாக்கை தவறாக பயன்படுத்துகிறாரா? ஜாய் கிரிஸில்டாவுக்கு நீதி கிடைக்குமா?” என்ற சந்தேகத்தில் உள்ளனர்.