துல்கர் சல்மான் தயாரித்த மலையாளப் படமான ‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’வில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்தார். டொமினிக் அருண் இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வசூலில் சாதனை படைத்துள்ளது.
இதன் அடுத்த பகுதி விரைவில் தயாராகிறது. இதில் டோவினோ தாமஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், மமிதா பைஜு இதில் ஒரு வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது, “நான் இதில் நடிப்பேனா என்று தெரியவில்லை.

அடுத்த பாகங்களில் எனக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ‘பிரேமலு 2’ படம் எப்போது வெளியாகும் என்றும் கேட்கிறார்கள்.
அது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே அது குறித்து எனக்குத் தெரியாது.” பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்த ‘டியூட்’ படம் நேற்று வெளியானது.