சென்னை: தக் லைப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ஏன் கிடைக்கலை தெரியுமா என்று நடிகர் மன்சூர் தெரிவித்துள்ளார்.
கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த தக் லைப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. நெகடிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் காரணமாக வசூலும் மிக குறைவாகவே வந்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் ‘தக் லைப் இதனால் தான் ஓடவில்லை’ என குறிப்பிட்டு காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.
‘காலை கனவினில் காதல் கொண்டேன்..’ என்ற முத்த மழை பாடல் படத்தில் இடம் பெற்று இருந்தால் படம் ஓடி இருக்கும். அது இடம்பெறாதது தான் படம் வரவேற்பை பெறாததற்கு காரணம் என நான் நினைக்கிறேன் என மன்சூர் தெரிவித்து இருக்கிறார்